Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வடக்கில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் உயிர்கொல்லி போதைக்கு அடிமை – நா.வேதநாயகன்

ஜனவரி 26, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

ஆண்களுக்கு நிகராக பெண்களும் உயிர்கொல்லி போதைப் பாவனைக்கு இலக்காகி இருக்கின்றார்கள். எமது இளைய சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றது? இது ஆபத்தான நிலைமை. இதனைத் தடுப்பதற்கு இளையோர்களின் ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடும் தளங்கள் தேவை. அதற்கான வசதிகளை நாம் ஏற்படுத்திக் கொடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் இளங்கலைஞர் மன்றம் புனரமைக்கப்பட்டு நேற்றைய தினம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில்,

இந்த இளங்கலைஞர் மன்றத்தின் நிறுவுனர் பொன்.சுந்தரலிங்கம், இளங்கலைஞர்களின் வளர்ச்சிக்காக இரவும் பகலும் சிந்திக்கும் ஒருவர். இன்று புலம்பெயர்ந்திருந்தாலும் எமது மண்ணைப்பற்றி நினைத்துக் கொண்டு இந்த மண்ணின் முன்னேற்றத்துக்காக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார். புலம்பெயர்ந்து சென்ற சிலர் எமது ஊரை மறந்து இருக்கின்றார்கள். ஆனால் சுந்தரலிங்கம் அவர்களைப் போன்றவர்களால் எமது மண் பெருமை கொள்கின்றது.

இப்போது இசை விழாக்கள் அல்லது பொதுவான நிகழ்வுகளுக்கு ஆட்கள் வருவது மிகக் குறைவு. இன்று இந்த மண்டபம் நிறைந்திருப்பதைப்போல எதிர்காலத்திலும் இருக்கவேண்டும்.

இன்றைய இளையோரின் சிந்தனை திசை திருப்பப்படுகின்றது. அவர்கள் தங்கள் ஓய்வு நேரங்களை எவ்வாறு செலவிடவேண்டும் என்பது தெரியாது, தவறான வழிக்கு வழிப்படுத்தப்படுகின்றார்கள்.

வடக்கு மாகாணத்துக்கான புனர்வாழ்வு நிலையம் அமைப்பது தொடர்பில் என்னுடன் கலந்துரையாடினார்கள். அதற்குப் பொறுப்பானவர்கள் தங்களுக்கு இரண்டு இடங்கள் தேவை எனக் கேட்டார்கள்.

ஏன் இரண்டு இடம் தேவை என அவர்களிடம் நான் கேட்டேன். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தேவை எனச் சொன்னார்கள். பெண்களுக்கும் புனர்வாழ்வு நிலையம் தேவையா எனக் கேட்டேன்.

இப்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் உயிர்கொல்லி போதைப் பாவனைக்கு இலக்காகி இருக்கின்றார்கள் எனச் சொன்னார்கள். மிக மனவேதனையான விடயம். எமது இளைய சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றது? இது ஆபத்தான நிலைமை. இதனைத் தடுப்பதற்கு இளையோர்களின் ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடும் தளங்கள் தேவை. அதற்கான வசதிகளை நாம் ஏற்படுத்திக் கொடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், இளங்கலைஞர் மன்றத்தின் காப்பாளரும் சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமான செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், இளங்கலைஞர் மன்றத்தின் நிறுவுனர் பொன்.சுந்தரலிங்கம், இசைவாணர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி 3 பஸ்கள் மோதி விபத்து – 29 பேர் படுகாயம்
அடுத்த செய்தி யாழில் குடியரசு தின நிகழ்வுகள் இடம்பெற்றது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கல்வியின் சுமை மாற்றப்படும் – அமைச்சர் சாவித்திரி போல்ராஜ்!

ஜூலை 24, 2025
இலங்கை

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக போராடுபவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவு.

பிப்ரவரி 18, 2025
இலங்கை

வவுனியா மாவட்ட செயலகத்தில் பொங்கல் விழா நாளையதினம் நடைபெறவுள்ளது.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் சந்திப்பு

மார்ச் 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?