காலி, இமதுவ, அங்குலுகஹா சந்திப் பகுதியில் மூன்று பஸ்கள் ஒன்றின் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 29 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஓடிக்கொண்டிருந்த இரண்டு பஸ்களும் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கி காயமடைந்த 29 பேரில் 23 பேர் இமதுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 6 பேர் கராபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.