Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

அட”தளபதி 69″ திரைப்படத்தின் தலைப்பு நல்ல இருக்கே….

ஜனவரி 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய படம் “தளபதி 69” என்று தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் அக்டோபர் மாத வாக்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியல்வாதி அவதாரம் எடுத்துள்ள விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்று கூறப்படுகிறது.

அவ்வப்போது, இந்தப் படத்தின் படப்பிடிப்பு சார்ந்த தகவல்கள் மட்டும் வெளியாகி வந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி ஏதேனும் ஒரு அப்டேட் கிடைக்கும் என ஆவலாக காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில் வரும் ஜனவரி 26, குடியரசு தினத்தன்று தளபதி 69 படத்தின் அப்டேட் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘தளபதி 69’ படத்திற்கு ‘நாளைய தீர்ப்பு’ என தலைப்பு வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1992 இல் வெளியான நாளைய தீர்ப்பு, விஜய் கதாநாயகனாக நடித்த முதல் படமாகும். எனவே விஜய்யின் கடைசி படம் என்பதாலும், 2026 தேர்தலில் அவரின் நேரடி அரசியல் பிரவேசத்திற்கு பொருத்தமாக இருப்பதாலும் தளபதி 69 படத்திற்கு நாளைய தீர்ப்பு என பெயர் வைக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

 

முந்தைய செய்தி அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்புயல்: இதுவரை 4 பேர் உயிரிழப்பு
அடுத்த செய்தி யாழில் வர்த்தக கண்காட்சி.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

சாய் அபியங்கரின் இசையில் “பவள மல்லி” பாடல்

மார்ச் 3, 2026
சினிமா

திரைக்கு வரும் “தாய் கிழவி”

பிப்ரவரி 24, 2026
சினிமா

கூலி படத்தினால் தாமதமான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அறிவிப்பு

ஆகஸ்ட் 1, 2025
சினிமா

செட் ஜிபிடி’யிடம் உதவி கேட்ட அனிருத்!

ஆகஸ்ட் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?