Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
ஆரோக்கியம்

சண்டே ஸ்பெஷல் கறிவேப்பிலை சிக்கன்… செஞ்சு பாருங்க…

ஜனவரி 19, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

சண்டே என்றாலே அசைவம்தான், அதிலும் குறிப்பாக சிக்கன்தான். சிக்கன் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு என்பதை நாம் அறிவோம். சிக்கனை எத்தனை வகைகளில் சமைக்கலாம் என்பதற்கு கணக்கே இல்லை. ஒவ்வொரு நாளும் சிக்கனை சுவையாக சமைப்பதற்கு புதுப்புது வழிகள் கண்டுபிடிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.

சிக்கனை குழம்பு, வறுவல், சுக்கா மற்றும் கபாப் என பல வழிகளில் சமைக்கலாம். அப்படி பிரியாணி மற்றும் பிற சாப்பாடு வகைகளுக்கு சைடிஷாக வைத்து சாப்பிடக்கூடிய ஒரு உலர்ந்த சிக்கன் வறுவல்தான் கறிவேப்பிலை சிக்கன்.

கறிவேப்பிலையின் நன்மைகள் என்னென்ன என்பதை நாம் நன்கு அறிவோம். இதை சிக்கனுடன் அதிகளவில் சேர்த்து சமைத்து சாப்பிடும்போது அதன் நன்மைகளும், சுவையும் பலமடங்கு அதிகரிக்கும். இந்த பதிவில் சண்டே செய்வதற்கு ஏற்ற சூப்பரான கறிவேப்பிலை சிக்கனை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:

– சிக்கன் – அரை கிலோ

– நறுக்கிய வெங்காயம் – 1

– இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்

– பச்சை மிளகாய் – 3

– மல்லித்தூள் – 1 ஸ்பூன்

– மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்

– எண்ணெய் – 2 ஸ்பூன்

– உப்பு – தேவைக்கு ஏற்ப

– கொத்தமல்லி இலை – சிறிதளவு

கறிவேப்பிலை மசாலா செய்ய:

– கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி

– இலவங்கப்பட்டை – 1

– அன்னாசி பூ – 1

– ஏலக்காய் – 1

– சோம்பு – 1 ஸ்பூன்

– வரமிளகாய் – 2

– மிளகுத்தூள் – 1 ஸ்பூன்

செய்முறை: – சிக்கனை நன்றாக கழுவி ஓரமாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

– கருவேப்பிலை மசாலா செய்ய, ஒரு கடாயை குறைந்த தீயில் சூடாக்கி, கறிவேப்பிலை, இலவங்கப்பட்டை, அன்னாசி பூ, ஏலக்காய், சோம்பு, வர மிளகாய், கருப்பு மிளகு ஆகியவற்றைச் சேர்த்து, அனைத்தையும் வறுத்து, மசாலா வாசனை வரும் வரை வறுக்கவும். வறுத்தவுடன் ஆற விடவும்.

– வறுத்த மசாலா நன்கு ஆறியதும் அதை மிக்ஸி ஜாரில் போட்டு மென்மையான பொடியாக அரைக்கவும். இதை ஓரமாக வைத்துக் கொள்ளவும்.

– பின்னர் ஒரு பாத்திரத்தை மிதமான தீயில் வைத்து, சிறிது எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பச்சை வாசனை போனதும் வெங்காயத்தைச் சேர்த்து அது பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

– வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அதில் பச்சை மிளகாய் மற்றும் சிக்கனுடன் மஞ்சள் தூளை சேர்த்து வதக்கவும்.

– சிக்கன் பாதி வேகும் வரை பொருட்களை ஒன்றாகக் கிளறவும். சிக்கன் பாதி வெந்ததும் அதில் அரைத்து வைத்த கறிவேப்பிலை மசாலா மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து, உப்பு தூவி,சிக்கன் நன்றாக வேகும் வரை வதக்கவும்.

– சிக்கன் அடிபிடிக்காமல் அடிக்கடி கிளறி விடவும். சிக்கன் முழுமையாக வெந்ததும் இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை போட்டு அடுப்பை அணைக்கவும்.

– சண்டே சைடிஷாக சாப்பிடுவதற்கு சூப்பரான கறிவேப்பிலை சிக்கன் ரெடி!

 

முந்தைய செய்தி கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை.
அடுத்த செய்தி போலி ஆவணம் மூலம் அரச காணியை விற்பனை செய்து மோசடி – அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

ஆரோக்கியம்

சுரக்காய் ஜூஸ் தினமும் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

பிப்ரவரி 3, 2025
ஆரோக்கியம்

இரத்தத்தை சுத்தப்படுத்தும் வாழைப்பூ !

மார்ச் 29, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

பல நோய்களுக்கான ஒரே மருந்து!

மார்ச் 14, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..

ஏப்ரல் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?