அகில இலங்கை ரீதியிலான பூப்பந்து போட்டியானது வவுனியா, ஓமந்தை உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.
வடமாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் ஒழுங்கமைப்பில்
கடந்த ஜனவரி 18ம் திகதி தொடக்கம் 21ம் திகதி வரை குறித்த போட்டிகள் இடம்பெறவுள்ளது.
மேலும் 21ம் திகதி மதியம் இறுதிப்போட்டி இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டிகள் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவின் கீழ் இடம்பெறுவதுடன், இப்போட்டியில் நாடளாவிய ரீதியில் இருந்து 575 ஆண், பெண் போட்டியாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.