வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் ஏற்பாட்டில் பண்பாட்டுப் பொங்கல் பெருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
ஆலயத்தின் தலைவர் சி. சுப்பிரமணியம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம், முத்துமுகமது, வவுனியா அரசாங்க அதிபர் சரத் சந்திர உட்பட அதிதிகளாக அழைக்கப்பட்ட பலரும் ஊர்வலமாக நெளுக்குளம் சந்தியிலிருந்து அழைத்து வரப்பட்டு பல்வேறு பண்பாட்டு கலை கலாசார விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்று இருந்தது.
இதன்போது பொங்கல் பானைக்கு அரிசி போட்டு சம்பிரதாயமாக பொங்கல் ஆரம்பிக்கப்பட்டு அதன் பின்னர் தமிழர்களின் பண்பாட்டு கலையான கூத்து கலையில் உழவர் பொங்கல் இடம்பெற்று இருந்தது.
இதனை அடுத்து பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.