புரதச்சத்து, நார்ச்சத்து, கல்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் தாமிரம் ஆகியவை அத்திப்பழத்தில் காணப்படும் சில மேக்ரோ மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள்.
நம் உடல் ஆரோக்கியத்துற்கு உலர் பழங்கள் பல வகைகளில் உதவுகின்றன. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. அவற்றில் உலர் அத்திப்பழமும் மிக முக்கியமானது.
ஊறவைத்த உலர் பழங்களை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், எந்தெந்த உலர் பழங்களை எவ்வளவு நேரம் ஊறவைத்து சாப்பிடுவது நன்மை பயக்கும் என்பதை தெரிந்துகொள்வது மிக முக்கியமான விஷயம். அத்திப்பழங்களை உட்கொள்ள நினைப்பவர்களும் ஊற வைத்த அத்திப்பழங்களை யார் உட்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
அத்திப்பழம் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை அளிக்கும் ஒரு பழமாகும். புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் தாமிரம் ஆகியவை அத்திப்பழத்தில் காணப்படும் சில மேக்ரோ மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள். இந்த ஊட்டச்சத்துக்கள் பல பிரச்சனைகளிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகின்றன. அத்திப்பழத்தை இரவில் பாலில் ஊறவைத்து, காலையில் சாப்பிட்டு வந்தால், அது உடல் ஆரோக்கியத்திற்கு பல வித நன்மைகளை அளிக்கும். ஊறவைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அத்திப்பழத்தில் இயற்கையான இனிப்பு உள்ளது. இதில் உள்ள கலோரிகளின் அளவும் மிகவும் குறைவு. ஆகையால் இது எடையைக் குறைக்க உதவுகின்றது. தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் தினமும் ஊறவைத்த அத்திப்பழத்தை சாப்பிடலாம்.
இரத்த சோகை (Anemia)
இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் கண்டிப்பாக அத்திப்பழத்தை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் அத்திப்பழத்தில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
சரும பாதுகாப்பு (Skin Care)
அத்திப்பழத்தில் ஆரோக்கியத்தை காக்கும் பல வித பண்புகள் உள்ளன. இவை சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஊறவைத்த அத்திப்பழத்தை உட்கொள்வது சருமத்தை பளபளப்பாக மாற்ற உதவுகிறது. இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது.
இரத்த சர்க்கரை அளவு (Blood Sugar Level)
நீரிழிவு நோயளிகளுக்கு அவ்வப்போது ஏறி இறங்கும் இரத்த சர்க்கரை அளவு காரணமாக பல வித ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள முடிவதில்லை. ஆனால், அவர்களுக்கு ஊறவைத்த அத்திப்பழங்களை உட்கொள்வது நன்மை பயக்கும். அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தி (Immunity)
மாறிவரும் பருவ நிலை காரணமாக, நாம் அடிக்கடி பல நோய்களுக்கு ஆளாகிறோம். பல வகையான வைரஸ் தொற்றுகளை நாம் எதிர்கொள்ள வேண்டி வருகின்றது. இவற்றால் பாதிக்கப்படாமல் இருக்க, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிக முக்கியமாகும். அப்போதுதான் பருவகால காய்ச்சல், சளி, இருமல், சளி, சரும பிரச்சனைகள் ஆகியவற்றைத் தவிர்க்க முடியும். அத்திப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இவற்றை சாப்பிட பல உணவு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.