நமது உடலுக்கு நன்மை தரும் பலவகையான காய்கறிகள் உள்ளன அதில் ஒன்றாக, புடலங்காய் காணப்படுகின்றது.
இதன் காய், வேர், இலை என அனைத்தும் மருத்துவக் குணமுடையவை.
புடலங்காயை பச்சைப்பயறுடன் சேர்த்து கூட்டாக சமைத்துச் சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.
தீவிரமான மலச்சிக்கல் பிரச்சினை இருந்தால், தினமும் புடலங்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை உட்கொள்ளலாம்.
புடலங்காயில் கல்சியம், மக்னீசியம் உள்ளிட்ட பல சத்துக்கள் அதிக அளவு உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.
புடலங்காயின் இலையின் சாற்றைப் பிழிந்து நாள்தோறும் 2 தேக்கரண்டி வீதம் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் ,இதயம் பலமாகக் காணப்படும்.
பொதுவாக நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் சிறுநீரை வெளியேற்றக் கூடியவை. புடலங்காய், உடலில் உள்ள நச்சுத்தன்மை உட்பட சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுக்களையும் வெளியேற்றுகிறது.
எனவே ஏராளமான நன்மைகளை அள்ளித்தரும் இந்த புடலங்காயை உட்கொண்டு, ஆரோக்கியமாக வாழ்வோம்