Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ரோகிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம்-சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு!

ஜனவரி 9, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோகிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (9)முன்னெடுக்கப்பட்டது.

கையில் பதாதைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் குறித்த கவனயீர்பு போராட்டம் முன்னேற்றப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்கள்.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினரால் பெண்கள் குழுக்களின் பிரதிநிதிகள், மனிதஉரிமை பாதுகாவலர்கள் கடற்தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் இணைந்து ரோகிங்கியா அகதிகளை நாடடுகடத்த வேண்டாம் என இலங்கை அரசிடம் கோரிகை விடுத்துள்ளனர்.

இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கத்துவ நாடாகும் எனவே ஐக்கியநாடுகள் சபையின் கொள்கைகளுக்கு மதிப்பளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அவ்வாறே சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மனித உரிமைச்சட்டங்களை சர்வதேச வழக்காற்று சட்டங்கள் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டு நடக்கும் கடப்பாட்டையும் கொண்டுள்ளோம்.

நாடு கடத்தப்படாமை என்பது இந்த அனைத்து சட்டங்களினதும் மையக்கொள்கையாகும் எனவே மனிதாபிமான விழுமியங்களை நிலைநிறுத்துமாறும், இந்த அகதிகளின் சொந்த இடத்திற்கு அவர்கள் திருப்பி அனுப்பாதிருக்குமாறும் இலங்கை அரசிற்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இந்த அகதிகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் இரண்டு வாரங்களுக்கு மேலாக அந்த மாவட்டத்தின் சிவில் நிர்வாக கண்காணிப்பு இன்றி தங்கவைக்கப்பட்டுள்ளார்கள் இராணுவ மயமாக்கல் சூழலுக்குள் அகதிகளை தங்கவைப்பது சர்வதேச மனிதாபிமான நியமங்களுக்கும் அடிப்படை மனிதாபிமான விழுமியங்களுக்கும் மாறானதாகும்.

எனவே இந்த அகதிகளை மீரியானவில் உள்ள அகதிகள் மையத்திற்கு அல்லது வேறொரு பொருத்தமான இடத்திற்கு மாற்றுவதுடன் அப்பிரதேச சிவில் நிர்வாக கண்காணிப்புக்குள் அவர்களை கொண்டு வரவேண்டும்.
இலங்கை என்பது ஒரு அபிவிருத்தி அடைந்து வரும் நாடு எனும் வகையில் இலங்கை சர்வதேச அகதிகளின் புகலிடமையமாக மாறுவதை நாம் விரும்பவில்லை தற்போதுள்ள அகதிகளை சர்வதேச அகதிகள் சட்டத்திற்கு அமைய நடத்தவேண்டும் என்பதையே அரசாங்கத்திடம் வேண்டுகின்றோம்.

மேலும் ஐக்கியநாடுகள் சபையின் ஒத்துழைப்பினை பெறுமாறும் இந்த அகதிகளுக்கு அகதி அந்தஸ்தது வழங்கும் தகமையுடைய நாடுகளிடம் அந்த நாடுகளில் அகதி அந்தஸ்து வழங்குவது குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளுமாறும் கோருகின்றோம் என்றும் அவர்களின் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையினை கௌரவ பிரதமர் அவர்களுக்கும், வெளிவிவகார அமைச்சர் அவர்களுக்கும், ஐக்கியநாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடபிரதிநிதி அவர்களுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

முந்தைய செய்தி வடமாகாண ஆளுநரிடம் சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வை முடிவுறுத்தக்கோரி ஐங்கரநேசன் மனுவொன்றைச் சமர்ப்பித்தார்.
அடுத்த செய்தி சிங்கள இனவாதிகளிடம் இருந்து தமிழ் தேசியத்தை பாதுக்கா தமிழ் கட்சிகள் ஓரணில் திரளவேண்டும் – இரா. துரைரெட்ணம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

சீரற்ற வானிலையால் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பதவியில் உயிர்வாழ்வதே தமிழ் அரசியல்வாதிகளின் குறிக்கோள் – காணாமல் போன உறவுகளின் சங்கம்!

ஜூன் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். மின்னல் தாக்கத்தினால் 19 பேர் பாதிப்பு – 4 வீடுகள் சேதம்

ஏப்ரல் 29, 2025
இலங்கை

உண்மையை வெளியே கொண்டு வந்த சிலருக்கு எதிராக இரா.சாணக்கியன் வழக்கு தாக்கல் – த. சுரேஸ்

மார்ச் 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?