Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மக்களுக்கு சரியான முறையில் சேவையாற்றாத உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – உபாலி சமரசிங்க

ஜனவரி 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

‘மக்களுக்கு சரியான முறையில் சேவை வழங்காத அரச உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நாம் பின் நிற்கப் போவதில்லை. எனவே அரச உத்தியோகத்தர்கள் மக்களுடன் அன்பாக நடந்து கொண்டு அவர்களுக்கு உரிய நேரத்தில் சிறப்பான முறையில் சேவையை வழங்க வேண்டும் ‘ என ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம்(03) வெள்ளிக்கிழமை மன்னார் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நாட்டை கட்டி எழுப்புவதற்காக மக்கள் எங்களுக்கு ஒரு ஆணையை வழங்கி இருக்கிறார்கள்.

அதை சரியான முறையில் முன்னெடுத்து. மக்களின் பிரச்சினைகளை. விரைவில் தீர்க்க நாம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மன்னாரில் இடம்பெற்ற நில மோசடி இட மோசடி தொடர்பில் எல்லாவற்றையும் நாம் அறிந்திருக்கிறோம்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரச்சினைகள் என்று பார்க்கும் இடத்தில், கடந்த 15 வருடங்களுக்கு மேற்பட்ட பிரச்சினைகளை ஒரே நாளில் தீர்த்து விட முடியாது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு இதனை எமது அரசாங்கம் தீர்த்து வைக்கும்.

சிங்கள ,தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு இருக்கிறார்கள்.

அதை விட நாட்டின் பிரச்சினைகளை சுலபமாக தீர்த்து வைப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பும் எமக்கு தேவை.”என அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி மதுபானத்தை குறைந்த விலையில் உற்பத்தி செய்ய அரசாங்கம் யோசனை…
அடுத்த செய்தி விகாரையின் கிணற்றிலிருந்த வலம்புரி சங்கு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.போதனாவில் “நாள் சத்திர சிகிச்சை நிலையம்” ஆரம்பிப்பு

பிப்ரவரி 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியீடு- பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

ஆகஸ்ட் 7, 2025
இலங்கை

மட்டக்களப்பு கிரானில் பிள்ளையானின் சகா ஒருவர் கைது

ஆகஸ்ட் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சீரற்ற கால நிலையால் பலி எண்ணிக்கை 334 ஆக உயர்வு!

நவம்பர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?