Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மதுபானத்தை குறைந்த விலையில் உற்பத்தி செய்ய அரசாங்கம் யோசனை…

ஜனவரி 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சட்டவிரோதமான மதுபானங்களை அருந்துபவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் குறைந்த விலையில் தரமான மதுபானமொன்றை தயாரிப்பதற்கான யோசனையை அரசாங்கம் முன்வைத்துள்ளதாக அமைச்சர் சுனில் அந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

பெலவத்த சீனி தொழிற்சாலைக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் அங்கு இடம்பெறும் பணிகளை பார்வையிட்டப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

குறைந்த விலையில் மதுபானமொன்றை தயாரிப்பதற்கான யோசனையை முன்வைத்துள்ளோம். மக்களை மது அருந்த அரசாங்கம் ஊக்கப்படுத்துவது அல்ல இதன் நோக்கம். மது அருந்துபவர்கள் மற்றும் சட்டவிரோத மது அருத்துபவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது அவசியம்.

”குறைந்த தரத்திலான சோளங்களை பெற்று 180, 190 ரூபா செலவில் எத்தனோல் ஒரு போத்தல் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த எத்தனோல் ஊடாக குறைந்த தரத்தில் உற்பத்தி செய்யப்படும் மதுபானத்தைதான் 3000 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்கின்றனர்.

இதனை வாங்கி அருந்த முடியாதவர்கள் சட்டவிரோத மதுப்பானங்களை அருந்துகின்றனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்படுகிறது. பெலவத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளில் சீனி உற்பத்தியின் பின்னர் எஞ்சும் திரவியம் ஊடாக தரமான மதுபானத்தை உற்பத்தி செய்ய முடியும்.

அதேபோன்று மக்கள் உள்நாட்டு கரிம சீனியை கொள்வனவு செய்ய வேண்டும். இறக்குமதி செய்யப்படும் சீனிகளின் தரம் தொடர்பில் எவ்வித உத்தரவாதங்களும் இல்லை. வெள்ளைநிற சீனிகளில் எவ்வாறான இரசாயனப் பொருட்கள் கலக்கப்படுகின்றன என்பது பற்றி தெரியாது. இவை தொடர்பில் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம்.” என்றார்.

முந்தைய செய்தி கனடாவில் இரண்டு வகை உப்புக்கள் குறித்து எச்சரிக்கை.
அடுத்த செய்தி மக்களுக்கு சரியான முறையில் சேவையாற்றாத உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – உபாலி சமரசிங்க

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கைக்கு 20 மில்லியனை வழங்கிய ஜப்பானின் நோரிடேக் நிறுவனம்

டிசம்பர் 18, 2025
இலங்கை

நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீது கல் வீச்சு நடத்திய இந்திய கடற்தொழிலாளர்கள்

பிப்ரவரி 1, 2026
இலங்கை

‘வெலேசுதா’ உட்பட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

சிறுபான்மைக் குழுக்களை வலுப்படுத்தல்” தொடர்பான விசேட கலந்துரையாடல்

ஆகஸ்ட் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?