பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவருமான ‘வெலேசுதா’ என அழைக்கப்படும் கம்பளை விதானகே சமந்த குமார உட்பட மூவருக்கு 08 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (15) உத்தரவிட்டுள்ளது.
ஹெராயின் கடத்தல் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெந்திகே இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
இதன்போது, வெலேசுதா, அவரது மனைவி கயானி பிரியதர்ஷனி மற்றும் உறவினப் பெண் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.