Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மக்களை அலைக்கழிக்காமல் அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுங்கள்-ஆளுநர் வேதநாயகன்

ஜனவரி 3, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

புத்தாண்டு அன்று எடுத்துக் கொண்ட உறுதி மொழிக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் அரச பணியாளர்கள் செயற்பட வேண்டும் எனவும், மக்களை அலைக்கழிக்காமல் அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுங்கள் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் வியாழக்கிழமை காலை (02.) காணிப் பிரச்சினை தொடர்பான நடமாடும் சேவை இடம்பெற்றது.

நடமாடும் சேவைக்கு முன்னதான மன்னார் மாவட்டம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் தொடர்பில் மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரனால் ஆளுநருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

புலவு காணிகளில் அமைக்கப்பட்டுள்ள அரச கட்டிடங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

புலப்படுகையில் அமைக்கப்பட்ட அரச கட்டடங்களுக்கு அனுமதி வழங்க முடியாது எனக் குறிப்பிடப்பட்ட நிலையில், எதிர்காலத்தில் அந்தக் கட்டிடங்களை வேறிடங்களை அமைப்பதற்கான ஒழுங்குகள் தொடர்பில் ஆராயுமாறு ஆளுநர் அறிவுறுத்தினார்.

அதேவேளை மன்னார் மாவட்டத்தில் காணியற்ற மக்களுக்கு காணிகளை வழங்குவதற்கும் பெரும் சவால்களை எதிர்கொள்வதாக மன்னார் மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டார்.

குறிப்பாக வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களம் என்பன மக்கள், அரச திணைக்களங்கள் பயன்படுத்திய பல காணிகளை தமக்குரியது என வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் இந்தப் பிரச்சினை பொதுவாக இருப்பதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் கோரியுள்ள விவரங்களை அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்திய ஆளுநர், அது தொடர்பான தொடர் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணிகள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது. காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தவிசாளரை அழைத்து இந்தப் பிரச்சினைகள் தீர்க்கலாம் என ஆளுநர் குறிப்பிட்டார். மேலும் மன்னார் மாவட்டத்தில் லட்சக்கணக்கான கால்நடைகள் காணப்படும் நிலையில் அவற்றுக்குரிய மேய்ச்சல் தரவைகள் இல்லை எனக் குறிப்பிடப்பட்டது.

மேலும், குத்தகை அடிப்படையில் காணி வழங்கல்களில் உள்ள தாமதத்தை தவிர்ப்பதற்கு மேலதிக காணிகளை தற்காலிகமாக வழங்கி அதனை முடிக்குமாறு ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.

இந்தக் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் மேற்கொள்ளுமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார்.

அதன் பின்னர் மன்னார் மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மக்களால் முன்வைக்கப்பட்ட காணிப் பிரச்சினைகள் தனித்தனியாக ஆராயப்பட்டு தீர்வுகள் காணப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன், மேலதிக மாவட்ட செயலாளர் ம.சிறிஸ்கந்த குமார், வடக்கு மாகாண காணி ஆணையாளர் அ.சோதிநாதன், மன்னார் நகர் பிரதேச செயலாளர் ம.பிரதீப், மடுப் பிரதேச செயலர் கே.பீட் நிஜாகரன், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் சி.அரவிந்தன், நானாட்டான் பிரதேச செயலாளர் திருமதி கே.சிவசம்பு, முசலி பிரதேச செயலாளர் எஸ்.ரஜீவ், நில அளவை, வனவளத் திணைக்களத்தினர், வன உயிரிகள் திணைக்களத்தினர் ஆகியோர் பங்கேற்றனர்.

முந்தைய செய்தி இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
அடுத்த செய்தி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி கிளிநொச்சி நகரில் கையெழுத்து போராட்டம் மேற்கொள்ள பொலிசார் தடை.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு!

ஜூலை 10, 2025
இலங்கை

“கந்தரோடை விகாரை ” பெயர் பலகை விவகாரம் – பொலிஸார் தீவிர விசாரணை

ஜனவரி 19, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மடுவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

மே 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மக்களின் ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கவே “பயங்கரவாத தடைசட்டம்”

பிப்ரவரி 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?