இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் கணிசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக குழந்தை நல மருத்துவ ஆலோசகர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் 350,000 இருந்து 250,000 ஆக குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்டிசம் மட்டுமின்றி புற்றுநோய், நீரிழிவு நோய் போன்ற நோய்களும் குழந்தைகளை அதிகம் பாதிப்பதாக தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் இந்த சூழ்நிலையில் சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.