ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட முதியவர் ஒருவர் இட்லி உண்ணும் போட்டியில் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் ஓணத்தை முன்னிட்டு கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இட்லி உண்ணும் போட்டி நடைபெற்றது.
அதிக இட்லி உண்பவர்க்கு ரூ.5000 பரிசு தொகை என அறிவிக்கப்பட்டது.இந்த போட்டியில் சுரேஷ் என்ற 50 வயது முதியவர் பங்கேற்றுள்ளார். வெற்றி பெற வேண்டுமென அவசரமாக 3 இட்லியை ஒன்றாக முழுங்க முயற்சித்தபோது இட்லி தொண்டையில் சிக்கி மூச்சு விட முடியாமல் துடிதுடித்துள்ளார்.
உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.சம்பவம் தொடர்பில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.