2024 ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ண போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ளன. போட்டிகள் ஜூலை 19 முதல் 28 வரை தம்புல்லையில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் , பங்களாதேஷ் , UAE , நேபாளம், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய எட்டு மகளிர் அணிகள் தொடரில் விளையாடவுள்ளன. இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதும் குழு-நிலை போட்டி ஜூலை 21ம் திகதி திட்டமிடப்பட்டுள்ளது.
