கனேடிய இரும்பு மற்றும் அலுமினியம் உற்பத்தியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதிக்க திட்டமிட்டுள்ள புதிய வரி நடவடிக்கையை “முற்றிலும் நீதி இல்லாதது” என கியூபெக் முதலமைச்சர் பிரான்சுவா லெகோ(François Legault) கடுமையாக விமர்சித்துள்ளார்.
டிரம்ப், இரும்பு மற்றும் அலுமினிய இறக்குமதிகளுக்கான வரியை 50 சதவீதமாக இரட்டிப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, லெகோ இது தொடர்பாக X தளத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்
“இந்த வரி உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டால், அது எங்கள் பொருளாதாரத்தையும், அமெரிக்க பொருளாதாரத்தையும் பாதிக்கும்,” என கியூபெக் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்
மேலும், இந்த நிலைமையை அவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் என்றும், அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட உள்ள நிர்வாக உத்தரவின் விவரங்களை எதிர்பார்த்து உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், “அதிகம் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு உதவி திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன ” எனவும் கியூபெக் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
