Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு ஆசிரியர் எமக்கு வேண்டாம்- புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

மே 9, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

பிரபல பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர் என கணித பாட ஆசிரியரை கொழும்பிலிருந்து புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்வதற்கு எடுத்த தீர்மானத்திற்கு எதிராக புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரிக்கு முன்பாக இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

கொழும்பில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் தில்ஷி அம்ஷிகா எனும் மாணவி துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதினால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தில், சந்தேக நபராக கருதப்படும் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

மேற்படி இடமாற்றம் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரினால் கடந்த 7ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த இடமாற்றம் தொடர்பாக கொழும்பு மற்றும் வடமேல் மாகாணங்களின் கல்விப் பணிப்பாளருக்கும் கொழும்பு மற்றும் புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் குறித்த அதிபர்களுக்கும் கடிதத்தின் பிரதிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பாரிய குற்றச்சாட்டு ஒன்றுடன் தொடர்புடைய கணித பாட ஆசிரியரை பாடசாலைக்குள் அனுமதிக்க முடியாது என்பதை வலியுறுத்தி புத்தளம் மக்களால் மேற்படி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள், பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘சீர் திருத்தப் பள்ளி அல்ல, புத்தளம்’, ‘அநீதியான நியமனத்தை நீதியாக எதிர்க்கிறோம்’,
‘ஒழுக்கம் கெட்ட ஆசிரியரை பணி நீக்கம் செய்’, ‘இடைநிறுத்தப்பட வேண்டிய ஆசிரியர், இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டிக்கிறோம்’, ‘தவறு செய்து தண்டிக்கப்பட வேண்டிய அரச அதிகாரிகளின் சிறைச்சாலை அல்ல புத்தளம், புத்தளம் இனியும் இதனை அனுமதிக்காது’ இதுபோன்ற மூன்று மொழிகளில் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறு புத்தளம் மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும், தனது உயிரை மாய்த்துக் கொண்ட குறித்த மாணவிக்கும், மாணவியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

முந்தைய செய்தி வாக்குக்காக கசிப்பு வழங்கிய கட்சி தமிழரசுக் கட்சி அல்ல – சிவஞானம் சிறிதரன்
அடுத்த செய்தி கனடா இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற கேர்னல் தர அதிகாரிக்கு அபராதம் விதிப்பு…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வடமாகாண ஆளுநரை சந்தித்த டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பொடி லெஸியை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு

பிப்ரவரி 27, 2026
இலங்கை

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை.

பிப்ரவரி 25, 2025
இலங்கை

சீதையம்மன் ஆலய அபிவிருத்திக்ககு அரசு ஒத்துழைப்பு வழங்கும்!

ஆகஸ்ட் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?