மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஊவா மாகாணத்தில் இயங்கும் தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் டப்ளியூ. ரந்தெனிய கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு நாளை மறுநாள் (27) விடுமுறை வழங்கவும் முன்னர் முடிவு செய்யப்பட்டிருந்தது.
குறித்த விடுமுறைக்கான பதில் பாடசாலையை எதிர்வரும் வாரத்தின் விடுமுறை நாளில் நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.