Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

துப்பாக்கியை காட்டி மிரட்டிய வனவள அதிகாரி – சத்தியலிங்கம் குற்றச்சாட்டு

ஏப்ரல் 21, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் மக்களின் சொந்த காணிகளை எல்லையிட வந்த வனவள அதிகாரி ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பிரதேச தேர்தல் காரியாலயம் வவுனியா மகாறம்பைக்குளம் பிரதான வீதியில் திறந்துவைக்கப்பட்டது.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் இலங்கை தமிழரசுக்கட்சி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. இது ஒரு எல்லைப்புற மாவட்டம். இதன் இனப்பரம்பல் கணிசமான அளவு மாற்றப்பட்டிருக்கிறது. எந்த அரசாங்கம் வந்தாலும் இந்த செயற்திட்டம் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

தற்போது இந்த ஆட்சிமாற்றம் ஏற்ப்பட்டமைக்கு முக்கிய காரணம் நாட்டின் பொருளாதார பிரச்சனையே. கடந்தகால ஆட்சியாளர்கள் விட்ட தவறே ஜேவிபி என்ற என்பிபி ஆட்சியமைப்பதற்கு காரணமாக இருந்தது.

இலங்கை மக்கள் என்ற வகையில் பார்த்தால் ஊழல் இல்லாத ஒருஆட்சி, மக்களுடைய சொத்தை கொள்ளை அடிக்காத அரசாங்கமும், ஆட்சியாளர்களும் இருக்க வேண்டியது அனைவருக்கும் பொதுவான ஒரு பிரச்சனை.

ஆனால் தமிழ்மக்களை பொறுத்தவரை இதைவிட மேலதிகமாக இனப்பிரச்சனை என்ற ஒன்று இருக்கிறது. இந்த அரசாங்கம் பொருளாதார முன்னேற்றத்தை காண்பதற்குரிய முதற்படிகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு நாங்கள் நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் ஆதரவு அளிக்கலாம்.
ஆனால் எமது அரசியல் போராட்டத்திற்கான தீர்வு கிடைக்கும் வரையில் தமிழ்மக்களாகிய நாங்கள் விடிவுநோக்கிய பயணத்தில் மாற்றமில்லாமல் தொடர்ந்து பயணிக்க வேண்டிய கடமை இருக்கிறது.

தற்போதைய அரசுக்கு பயங்கவரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தும் அதனை நீக்காமல் இப்போதும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

அதேபோல அண்மையில் வவுனியாவில் மக்களின் சொந்த காணிகளுக்குள் வனவளத்திணைக்களம் எல்லை போடுகின்றமை தொடர்பாக பொதுமக்களால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது. நான் அங்கு சென்றமையால் அதனை தடுக்கமுடிந்தது. ஏன் அரசாங்கத்தால் இதனை செய்யமுடியாது.

இடம்பெயர்ந்த மக்கள் தற்போது தமது சொந்த காணிகளுக்குள் செல்வதை இந்த திணைக்களம் எதற்காக தடுக்கிறது. வவுனியா பூவரசங்குளம் பகுதியில் உள்ளமக்கள் இது தங்களுக்குரிய காணி என்று தெரிவித்த போது அங்கு நின்ற வனவளத்திணைக்கள அதிகாரி தனது துப்பாக்கியை எடுத்து காட்டியுள்ளார்.நான் அவர்களை எச்சரித்திருந்தேன்.

இதன் மூலம் அடக்கு முறை அரசியலை செய்வதற்கு அரசாங்கம் மாறினாலும் அரச நிர்வாகம் மாறவில்லை என்பது புலப்படுகிறது. அதனை மாற்றவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது.

நாட்டின் பொருளாதாரத்தை ஆறுமாதங்களுக்குள் மாற்றுங்கள் என்று கூறுவது இயலாத விடயம்.அதற்கு நீண்டகாலம் எடுக்கும். அதற்கு நாங்களும் இணைந்து வேலை செய்ய தயாராக இருக்கிறோம். அது பொதுவான பிரச்சனை. ஆனால் இந்த மக்களின் காணி விடயங்களில் நிதி செலவளிக்காமல் உடனடியாக தீர்வினை வழங்கமுடியும். அதனை செய்ய ஏன் தயங்குகின்றனர். இந்த நிர்வாகங்களை கையாளமுடியாத கையாலாகாத அரசாங்கமாகவே இது இருக்கிறது. என்று தெரிவித்தார்.

முந்தைய செய்தி யாழ் பல்கலைக்கழக பொன் விழா சங்கமம்…
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்-22 ஏப்ரல் 2025

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

காற்றாலைக்கு எதிராக கட்டைக்காட்டில் வெடித்தது போராட்டம்

செப்டம்பர் 28, 2025
இலங்கை

2025ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.9 சதவீதமாக உயர்வு!

செப்டம்பர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு ஆரம்பம்!

ஏப்ரல் 20, 2025
இலங்கை

அன்னை பூபதியின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்திக்கு வவுனியா மக்கள் அஞ்சலி

ஏப்ரல் 15, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?