Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

புலோலி அறுபது பாகம் கிணற்றை புனரமைக்க நடவடிக்கை….

ஏப்ரல் 7, 2025
jaffna
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் , வடமராட்சி , புலோலி பகுதியில் அமைந்துள்ள அறுபது பாகம் கிணறு, பல நூற்றாண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்ததுடன், இப்பகுதியின் பண்பாட்டு மரபையும் பல்லவர் கால வரலாற்றையும் பறைசாற்றும் ஒரு முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது.

இந்த கிணறு தற்போது தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும், பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்படுவதாலும், பாழடைந்த நிலையில் உள்ளது. சுற்றுப்புறம் அடையாளம் தெரியாமல் காணப்படுகின்றது.

இக்கிணற்றைப் புதுப்பித்து, வரலாற்று அடையாளமாகவும் சுற்றுலா மையமாக மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதனை அடுத்து குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கிணற்றின் நிலைமையை நேரில் அவதானித்ததுடன் , அப்பகுதி மக்களின் நிலைமைகள் தொடர்பிலும் நேரில் கேட்டு அறிந்து கொண்டனர்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

இக்கிணற்றை முறையாக புனரமைத்து, சுற்றுப்புறத்தை அழகுபடுத்தி, வரலாற்று பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும், ஏதேனும் சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்துடன் இணைத்து இந்தப் பகுதிக்கு நவீன சீரமைப்பை வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், இவ்விடயம் தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்துடன் கலந்துரையாடல் நடத்தி, சட்டப்பூர்வமாக முறையான அனுமதிகளைப் பெற்று, புனரமைப்பு திட்டம் உருவாக்கப்படும்.

புலோலி அறுபது பாகம் கிணறு, ஒரு ஊரின் உணர்வுப் பிணைப்பு மட்டுமன்றி, வரலாற்றையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் சின்னமாக விளங்குகிறது. அதன் நிலைமையை மாற்ற மக்கள் முன்வைத்துள்ள இந்த முயற்சிக்கு முழுமையான ஆதரவு அளிக்கபட்டுள்ளதுடன், விரைவில் தெளிவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நீர்ப்பாசன உத்தியோகத்தர்கள்…
அடுத்த செய்தி இந்தியன் கொலை தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் கருத்து தெரிவிப்பு…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

காணி உரிமையாளர்களுக்கு எதிராக பொலிஸார் வழக்குகளை தொடர்ந்துள்ளனர் – எம்.ஏ. சுமந்திரன்

ஜனவரி 5, 2026
இலங்கை

வெலிமடை மண்சரிவு – இரு உடல்கள் மீட்பு!

நவம்பர் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் இன்று 04 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செப்டம்பர் 4, 2025
இலங்கை

மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள்

டிசம்பர் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?