முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா உள்ளிட்ட நால்வருக்கு ஐக்கிய இராச்சியம் தடை விதித்துள்ளது.
இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு இவர்கள் பொறுப்புக்கூற வேண்டியுள்ளதாக தெரிவித்து இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதில் முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா மற்றும் விடுதலைப்புலிகளின் அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இவர்கள் நால்வரும் ஐக்கிய இராச்சியத்திற்கான பயணங்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ஐக்கிய இராச்சியத்திற்குள் சொத்துக்களை சேகரித்து வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற சட்டவிரோத கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சிய அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே வேளை கனேடிய அரசு இலங்கையின் முன்னால் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு முதன் முதலில் தடை விதித்திருந்தது இதன் தொடர்ச்சியாக தற்பொழுது பிரித்தானிய அரசு முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா மற்றும் விடுதலைப்புலிகளின் அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு தடை விதித்துள்ளது.
