Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கச்சதீவு அந்தோனியார் தேவாலய திருவிழா

மார்ச் 11, 2025
கச்சதீவு
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கச்சதீவு அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு வருகை தருவோர் தமது முழுமையான விபரங்கள் தொடர்பான பிரதிகளை கொண்டுவருமாறு மாவட்ட செயலரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவானது யாழ். மாவட்டச் செயலாளர் ஒருங்கிணைப்பின் கீழ் ஆயர் இல்லம் – யாழ்ப்பாணம், இலங்கை கடற்படை, இந்திய துணைத் தூதரகம் – யாழ்ப்பாணம், பிரதேச செயலகம் – நெடுந்தீவு, பிரதேச சபை – நெடுந்தீவு மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினது முழுமையான ஒத்துழைப்புடன் எதிர்வரும் 14ஆம் மற்றும்15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

14ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 4.00 மணி தொடக்கம் மு.ப 11.30 மணி வரை அரச பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.

கச்சதீவுக்கான படகு சேவையானது குறிக்கட்டுவான் இறங்குதுறையில் இருந்து 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 5.00 மணி முதல் மு.ப 12.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.

குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1300 ஆகும்.

கச்சதீவுக்கு குழுவாக / தனியாக வருகை தரும் மக்கள் அவர்களது முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், வயது, பால்நிலை மற்றும் அவர்கள் பயணிக்கும் படகு இலக்கம், படகின் வகை, படகோட்டியின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை இரு பிரதிகளில் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வெளிமாவட்டங்களிலிருந்து தமது சொந்த படகுகளில் திருவிழாவுக்கு செல்வோர் தமது வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வதுடன் 14ஆம் திகதி பி.ப 4.00 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கச்சதீவு உற்சவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு 14ஆம் திகதி இரவு உணவு மற்றும் 15ஆம் திகதி காலை உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தலமாக உள்ளதால் மதுபானம் கொண்டு செல்லுதல் மற்றும் பாவித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட செயலர் அறிவித்துள்ளார்.

அதேவேளை ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாட்டை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

முந்தைய செய்தி அனுர அரசுக்கு எதிராக யாழில் போராட்டம்……
அடுத்த செய்தி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நெடுந்தீவில் 12 இந்திய மீனவர்கள் கைது

செப்டம்பர் 28, 2025
இலங்கை

கிளிநொச்சியில் கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுப்பு

பிப்ரவரி 22, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

ஜூலை 30, 2025
1
இலங்கை

சுயதொழில் முயற்சியாளர்களாக மாறவுள்ள அஸ்வெசும பயனாளிகள்

பிப்ரவரி 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?