Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக்கும் ‘குளிர் நீர் தெரபி’….

மார்ச் 8, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

ஐஸ்கட்டி போல் ஜில்லென குளிர்ந்திருக்கும் நீரில் குளியல் போடுவது கூட ஆரோக்கியமானது . ‘குளிர் நீர் தெரபி’ எனப்படும் இந்த சிகிச்சையை மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

தசை வலி

உடற்பயிற்சியின்போதோ, கடுமையான உடல் உழைப்பின்போதோ ஏற்படும் தசை வலியை போக்க குளிர்ந்த நீர் சிகிச்சை உதவும்.

ஏனெனில் குளிர்ந்த நீர் ரத்த நாளங்களின் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் மற்றும் ஆக்சிஜனைக் கொண்டு செல்லும் பணியை எளிதாக்கும்.

மேலும் குளிர்ந்த நீர் சிகிச்சை உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைப்பதன் மூலம் தசைகளுக்கு புத்துயிர் அளிக்கும்.

லாக்டிக் அமிலம் போன்ற கழிவுப்பொருட்களை வெளியேற்றும். கடுமையான உடல் செயல்பாடுகளுக்கு பிறகு ஏற்படும் தசை வலியையும் குறைக்கும்.

தூக்கம்

குளிர்ந்த நீர் சிகிச்சை நன்றாக தூங்கவும் உதவிடும். உடல் வெப்பநிலை குளிர்ச்சி சூழலில் இருப்பது தூக்கத்திற்கு உகந்தது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தூங்குவதற்கு முன்பு 5 முதல் 10 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் குளியல் போடுவது ஆழ்ந்த மற்றும் அமைதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

குளிர்ந்த நீர் சிகிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதனால் சட்டென்று நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்பும் குறையும்.

குளிர் நீர் சிகிச்சை மேற்கொண்டவர்கள் வலிமையான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருப்பதாக நெதர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

மனநிலையை மேம்படுத்தும்

ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொண்டு மன ரீதியாக பலவீனமாக இருந்தாலோ, மன வேதனைக்கு ஆளானாலோ மன நிலையை மேம்படுத்துவதற்கு குளிர்ந்த நீர் குளியல் துணை புரியும்.

அப்படி உடலில் குளிர் வெப்பநிலை வெளிப்படுவது நோராட்ரெனலின் உற்பத்தியை அதிகரிக்கும்.

இது மூளையை தூண்டி கவனமுடன் செயல்படுவதற்கு ஊக்கமளிக்கும்.

மன நிலையை செம்மைப்படுத்தவும் வழி வகுக்கும்.

மனச்சோர்வை போக்கும்

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் குளிர்ந்த நீரில் மூழ்கி எழுவது பலனளிக்கும்.

இந்த குளிர் நீர் குளியல் மூளையில் இருந்து நரம்பு மண்டலம் வழியாக பயணிக்கும் நரம்புகளை தூண்டி அதன் செயல்பாடுகளை மேம்படுத்த உதவிடும்.உடலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி சோர்வை விரட்டிவிடும்.

அதிலும் மனதளவில் மந்தமாகவும், சோர்வாகவும் உணர்ந்தால் குளிர்ந்த நீர் சிகிச்சை சிறந்த தீர்வாக அமையும்.

மனத்தெளிவை உண்டாக்கும்.

கவனிக்கும் திறனையும், அறிவாற்றல் செயல்பாட்டையும் வலுப்படுத்தும்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்…
அடுத்த செய்தி ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருக்கும் இடையில் நிகழ்நிலை சந்திப்பு…..

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தேங்காய் தலையில் விழுந்ததில் 2 வயது குழந்தை உயிரிழப்பு!

ஆகஸ்ட் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 63 வயதுடைய சந்தேகநபர் கைது

ஜனவரி 30, 2026
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

ஜூலை 8, 2025
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

எக்ஸ் தளம் முடக்கம்….

மார்ச் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?