Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அரியாலையில் மீட்கப்பட்டது மனித எச்சங்களே!

பிப்ரவரி 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மீட்கப்பட்ட எச்சங்கள் தொடர்பான வழக்கு இன்றைய தினம் இரண்டாவது தடவையாக, நீதிவான் திரு.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சட்ட வைத்திய அதிகாரி தமது அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பித்தார். குறித்த பகுதியில் 40க்கும் மேற்பட்ட எலும்பு மாதிரிகள் பெறப்பட்டதாகவும், அவற்றில் இரண்டு மாதிரிகளை விட ஏனைய அனைத்தும் மனித எச்சங்களின் மாதிரிகளாக உள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மூலம் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டது.

இது குறித்து முதற்கட்ட ஆய்வு செய்ய வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தார். அத்துடன் 2 அடி ஆழத்துக்கு கீழேதான் இந்த மனித எச்சங்கள் எடுக்கப்படுள்ளதாகவும், இது தொடர்ச்சியாக மனித எச்சங்களால் நிறைந்த பகுதியாக உள்ளதா அல்லது தனிப்பட்ட புதைகுழியாக உள்ளதா எனவும் ஆய்வு செய்ய வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

அந்த வகையில் மூத்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் ராஜ் சோமதேவா அவர்கள் இது குறித்து தனது ஆய்வினை செய்வதற்கு விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும், ராஜ் சோமதேவா கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான ஆய்வினையும் மேற்கொள்வதாக கூறினார்.

இவற்றை கருத்தில் கொண்ட நீதிவான், முதற்கட்டமாக ஸ்கேன் மூலம் ஆய்வினை செய்வதாகவும், அந்தவகையில் 04.02.2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இது தொடர்பான கலந்துரையாடல் மன்றில் இடம்பெறும் எனவும், காலநிலையை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

முந்தைய செய்தி வடமேற்கு பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு!
அடுத்த செய்தி ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணப்போட்டியில் வென்ற ஆப்கானிஸ்தான்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

யூடியூப்பர் கிருஷ்ணாவை மடக்கிப் பிடித்த ஊரவர்கள்!

மார்ச் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சீரற்ற கால நிலையால் பலி எண்ணிக்கை 153 ஆக உயர்வு – 191 மாயம்!

நவம்பர் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

குருநாகல்-அனுராதபுரம் பிரதான வீதியில் கோர விபத்து-மூன்று பேர் பலி!

செப்டம்பர் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

லங்கா சால்ட் நிறுவனம் உப்பின் விலைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது!

ஆகஸ்ட் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?