Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஊடகவியலாளர் கடத்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த கோட்டாபய ராஜபக்ச!

நவம்பர் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கடத்தப்பட்ட ஊடகவியலாளர்களான கீர்த்தி நொயர் மற்றும் போதல ஜயந்த ஆகியோர் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும், சம்பவங்கள் தொடர்பில் ஞாபகம் இல்லை என்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான ஆள்கொணர்வு மனு விசாரணையின் மேலதிக சாட்சிப் பதிவின்போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் எழுப்பிய கேள்விகளுக்கு, சம்பவங்கள் குறித்து தனக்கு நேரடியாக அறிவிக்கப்படுவதில்லை என்றும், பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும், 2009ஆம் ஆண்டு ஊடகவியலாளர்கள் தன்னைச் சந்தித்தது தொடர்பிலும் நீண்டகாலம் கடந்துவிட்டதால் ஞாபகம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். குமார் குணரத்தினம் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான கேள்விகளுக்கும் ஞாபகம் இல்லை என்றே பதிலளித்துள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் திகதி, யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் வைத்து லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டனர். இவர்களைக் கண்டறியக் கோரி 2012ஆம் ஆண்டு ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மேலதிக சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்காக வழக்கு விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதிக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

முந்தைய செய்தி வவுனியாவில் பயனாளிகளிடம் புதிய வீடுகளை கையளித்த பிரதி அமைச்சர்!
அடுத்த செய்தி திருநெல்வேலி மேற்கு பறவைக்குளத்தின் வடிகால் தூய்மைப்படுத்தும் பணிகள் முன்னெடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பல புதிய சீர்திருத்தங்களை உள்ளடக்கிய கல்வி முறை!

செப்டம்பர் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வரி செலுத்தாவிடின் சிறை செல்ல நேரிடும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

ஜூலை 13, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கல்முனை ஆதார வைத்தியசாலை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

ஆகஸ்ட் 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பாணின் விலை உயர்வு – பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவிப்பு

மார்ச் 23, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?