Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்குப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய நடவடிக்கை!

நவம்பர் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு மாகாணப் பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் மாகாண அலுவலகமொன்றை நிறுவுவது தொடர்பில் ஆளுநர் தலைமையிலான கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள், சட்டப் பாதுகாப்பில் காணப்படும் இடைவெளிகள் மற்றும் அரச நிறுவனங்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

தேசிய மகளிர் ஆணைக்குழுவின் தலைவி கிரேஸ் ஆசீர்வாதம் உள்ளிட்ட ஆணையாளர்கள் மற்றும் வடக்கு மாகாணத்தின் பல்வேறு துறைசார் பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கலந்தாய்வுக் கூட்டம் இன்றைய தினம் புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையிடலில் மேற்படி விடயங்கள் ஆராயப்பட்டதுடன் , குறித்த கலந்துரையாடலில் ஆளுநர் கருத்து தெரிவிக்கும் போது,

பெண்கள் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் அரசியல் வளர்ச்சியில் இன்றியமையாத பங்காற்றுகின்றபோதிலும், அவர்களுக்கான சமவாய்ப்புகளை உறுதிப்படுத்துதல், பாகுபாடு மற்றும் வன்முறைகளைத் தடுத்தல், பொருளாதாரச் சுதந்திரத்தை ஊக்குவித்தல், தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாடுகளில் அவர்களின் பங்கேற்பை அதிகரித்தல் ஆகியவற்றில் தொடர்ந்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

தேசிய மகளிர் ஆணைக்குழுவின் மாகாண அலுவலகத்தை நிறுவுவதற்கான முயற்சியை வரவேற்கிறேன், அது ஏற்கனவே செயற்படும் நிறுவனங்களின் பணிகளை மீளச் செய்வதாக அமையாமல், அவற்றுடன் இணைந்து செயற்படும் ஒருங்கிணைப்புப் பாலமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக, கிராமப்புறங்களிலும் சமூக ரீதியாகப் பாதிப்புக்குள்ளாகக்கூடிய நிலையிலும் வாழும் பெண்களின் உண்மையான தேவைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கான சேவைகள் மற்றும் முறைப்பாட்டு நடவடிக்கைகளை இலகுவாகப் பெற்றுக்கொடுப்பதில் அந்த அலுவலகம் கவனம் செலுத்த வேண்டும்

மாகாண அலுவலகத்தை நிறுவுவதற்குத் தேவையான நிர்வாக, சட்ட மற்றும் ஏனைய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன் என ஆளுநர் உறுதியளித்தார்.

முந்தைய செய்தி யுத்தத்தால் வீடுகளை இழந்தோருக்கு 2028 டிசம்பருக்குள் நிரந்தர வீடுகள் – அமைச்சர் அறிவிப்பு!
அடுத்த செய்தி கொழும்பு கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் வீதி தாழிறக்கம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

நாட்டை விட்டு தப்பியோடினார் வங்கதேச பிரதமர் !

ஆகஸ்ட் 5, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலையில் இடம்பெற்ற தீயணைப்பு தற்காப்பு கூட்டு பயிற்சி

ஆகஸ்ட் 14, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

திங்கட்கிழமை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானம்

ஜனவரி 31, 2026
இலங்கை

வலி வடக்கு பிரதேச சபையினால் டெங்கு விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டது!

செப்டம்பர் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?