கொழும்பு கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள டுப்ளிகேஷன் வீதியின் ஒரு பகுதி இன்று (25) திடீரெனத் தாழிறக்கம் அடைந்துள்ளது.
இதன் காரணமாக அந்த வீதியில் வாகனப் போக்குவரத்து ஒரு பாதைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதி தாழிறக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பத்தில் சுற்றியுள்ள வீதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. எனினும், தற்போதைய நிலவரப்படி வாகனங்கள் ஒரு பாதையின் ஊடாகச் செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே, கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டம் மற்றும் டுப்ளிகேஷன் வீதி ஊடாகப் பயணிக்கும் வாகனச் சாரதிகள் அவதானத்துடன் பயணிக்குமாறும், பொலிஸாரின் போக்குவரத்து அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
