Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி குளத்தில் பெருமளவு மீன்கள் உயிரிழப்பு!

நவம்பர் 23, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கிளிநொச்சி குளத்தில் பெருமளவிலான மீன்கள் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட அமைச்சர், மீன்கள் உயிரிழந்தமைக்கான காரணங்கள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி, சம்பவத்தின் உண்மை நிலவரம் தொடர்பான தெளிவான விளக்கத்தைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி குளத்தின் கீழ்ப்பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், பெரிய அளவிலான மீன்கள், நன்னீர் இறால்கள் மற்றும் மீன் குஞ்சுகள் உள்ளிட்ட பெருமளவிலான நீர்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து நீரில் மிதந்துள்ளன.

குளத்தின் நீர் வெளியேற்றப்பட்ட விதம் மற்றும் நீர்ப்பாசன நடவடிக்கைகளின் போது ஏற்பட்டிருக்கக்கூடிய பிரச்சினைகள் தொடர்பாகப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இவ்விடயம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, இச்சம்பவத்தினால் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக மேற்கொண்ட உழைப்பின் பலனாக வளர்க்கப்பட்ட மீன்களையும், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களையும் இழந்துள்ள மீனவர்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகள் குறித்தும் அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார்.

இதற்கமைய, பாதிக்கப்பட்ட மீனவர்களின் இழப்புகள், வாழ்வாதாரப் பாதிப்புகள் மற்றும் சம்பவத்திற்கான காரணங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகள் மூலம் விரிவான தகவல்களைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறும் வட மாகாண ஆளுநரிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், மீன்கள் பெருமளவில் உயிரிழந்துள்ளதால் குளத்து நீரின் தரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, இச்சம்பவத்திற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த பகுதியில் கிரந்த மீன்களை அகற்றும் பணியில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இறந்த மீன்களை அகற்றும் பணியில் நீர்ப்பாசன திணைக்களத்தினர் இராணுவத்தினர் கிளிநொச்சி குளத்தின் மீனவர்கள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர் இணைந்து இறந்த மீன்களை அகற்றும் பணியை முன்னெடுக்க வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழில் தரையிறங்காது மீண்டும் சென்னைக்கு திரும்பிய விமானம்!
அடுத்த செய்தி மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட போராட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தமிழக கடற்தொழிலாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டவர் கடற்கொள்ளையில் ஈடுபடுபவர் – ஊரவர்கள் குற்றச்சாட்டு

மே 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

திறைசேரி நிதி தொடர்பிலான விசாரணை ஆரம்பம்

ஏப்ரல் 28, 2026
இலங்கை

கருப்பையில் உள்ள குழந்தைகளை நேரடியாக பாதிக்கும் சரும கிரீம்கள்!

செப்டம்பர் 19, 2025
அண்மைய செய்திகள்கனடா

பென்சிலால் புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டுகளில், வாக்குகள் மாற்றப்படலாம் என்ற வதந்தி தவறானது – கனேடிய தேர்தல்கள் திணைக்களம்

ஏப்ரல் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?