கியூபெக்கின் புரோசார்ட் (Brossard) நகர எல்லையில் மலிவு விலை வீடுகளுடன் 810 குடியிருப்பு அலகுகளை உருவாக்கவென முன்வைக்கப்பட்ட திட்டத்தை, அப்பகுதி குடியிருப்பாளர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
‘குவார்ட்டியர் டிக்ஸ்30’ (Quartier DIX30) வர்த்தக மையத்திற்கும், ‘லெஸ் போர்டெஸ் டி லோண்ட்ரெஸ்’ (Les Portes de Londres) குடியிருப்புப் பகுதிக்கும் இடைப்பட்ட காணியில், எட்டு மாடிகளைக் கொண்ட நான்கு கோபுரங்களில் 810 வீட்டு அலகுகளைக் கட்ட ‘பிளான் ஏ’ (Plan A) எனும் கட்டுமான நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
இந்தத் திட்டமே தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், திட்டத்தை மீண்டும் புதிதாகத் தயாரிக்குமாறு புரோசார்ட் நகரசபை குறித்த கட்டுமான நிறுவனத்தைக் கோரியுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற பொது வாக்கெடுப்புப் பதிவேட்டில் 200-க்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்டதை அடுத்து, இத்திட்டம் தற்போதைய வடிவில் முன்னெடுக்கப்பட மாட்டாது என நகர முதல்வர் டோரீன் அசாத் (Doreen Assaad) அறிவித்துள்ளார்.
