Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மட்டக்களப்பில் மலேசியப் பெண் கைது!

நவம்பர் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு அம்பிளாந்துறை பிரதேசத்தில் வீடொன்றில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த மலேசியப் பிரஜையான பெண் ஒருவரை நேற்று புதன்கிழமை (18.11.2026) இரவு 8.30 மணியளவில் கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அம்பிளாந்துறை பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வீடொன்றில் மலேசிய நாட்டுப் பெண் ஒருவர் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாக பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்பான 119 என்ற இலக்கத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து நேற்று இரவு குறித்த வீட்டைப் பொலிஸார் முற்றுகையிட்டனர்.

கடந்த 10.05.2026 அன்று மலேசியாவிலிருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்த குறித்த பெண், அப்பிரதேசத்திலுள்ள தமது நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்த நிலையில் தவறி விழுந்து தனது வலது காலை முறித்துக்கொண்டுள்ளார்.

அதற்கான மருத்துவ சிகிச்சையைப் பெற்றுவந்த நிலையில், அவரது விசா காலம் கடந்த 08.09.2026 அன்று முடிவடைந்துள்ளது.

உடல் நலக்குறைவு காரணமாகச் சரியான காலத்தில் மீண்டும் நாட்டுக்குத் திரும்ப முடியாத நிலையில், விசா காலம் முடிவடைந்ததை அவர் கவனத்தில் கொள்ளாமல் இருந்துள்ளார்.

இதனையறிந்த சிலர் 119 என்ற அவசர இலக்கத்திற்குத் தகவல் அளித்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த பெண்ணைக் கைது செய்த பொலிஸார், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி வாய்க்கால் அமைத்ததால் நுளம்புத் தாக்கம்: யாழில் குடும்பம் குற்றச்சாட்டு
அடுத்த செய்தி யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகள் இரத்து!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இடம்பெற்ற 157 ஆவது காந்தி ஜெயந்தி நிகழ்வு

அக்டோபர் 2, 2026
இலங்கை

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்த மாணவர்கள்.

பிப்ரவரி 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

ஏப்ரல் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகளுக்கு இடமளிக்கப்படவேண்டும் – பா.உ ரவிகரன்

பிப்ரவரி 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?