Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

போதைப்பொருள் வழக்கு குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

நவம்பர் 16, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றவாளி ஒருவருக்கு 40 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும், 1 மில்லியன் ரூபா தண்டப்பணமும் விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா தீர்ப்பு வழங்கியுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் தேதி, மன்னார் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

அவரிடமிருந்த ஐஸ் போதை பொருள் பொதியுடன் சேர்த்து 54 கிராம் 40 மில்லிகிராம் மீட்கப்பட்டது..
அதனை பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது தூய நிலையில் 3.38 கிராம் ஐஸ் போதைப்பொருள் அடங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனையடுத்து, சட்டமா அதிபர் திணைக்களத்தால் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சந்தேக நபருக்கு எதிராக மன்னார் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்கள் மற்றும் எதிரி தரப்பு சாட்சியங்கள் யாவும் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டன. விசாரணைகளின் முடிவில், எதிரிக்கு எதிராக சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் அவர் குற்றவாளி என நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா தீர்ப்பளித்தார்.

தண்டனைக் குறைப்புக்கான விண்ணப்பத்தின் போது, எதிரி இளம் குடும்பஸ்தர் என்றும், ஒரு சிறிய குழந்தையின் தந்தை என்பதால் அவரைத் திருந்துவதற்கு நீதிமன்றம் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் எதிரி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.எனினும், நீதிமன்றம் பின்வரும் முக்கிய அவதானிப்புகளை முன்வைத்து அக்கோரிக்கையை நிராகரித்தது:

எதிரி இவ்வழக்கில் கைது செய்யப்படுவதற்குக் இரண்டு மாதங்களுக்கு முன்னர், மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் குறைந்த அளவிலான நிறையுடைய ஐஸ் போதைப் பொருள் வழக்கு ஒன்றில், குற்றவாளியாக காணப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

நீதிமன்றம் முன்பு வழங்கிய திருந்துவதற்கான வாய்ப்பை அவர் முறையாகப் பயன்படுத்தவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி, கைப்பற்றப்பட்ட சான்றுப்பொருள் அவரது சொந்த நுகர்வுக்காக உடமை கொள்ளப்பட்டதல்ல என்பதையும், அது வியாபாரம் செய்யும் நோக்கத்துக்காக வைத்திருக்கப்பட்ட பெறுமதியான பொருள் என்பதையும் கவனத்தில் எடுத்து சட்டத்தினால் விதிக்கப்படக்கூடிய உச்சபட்ச தண்டனை எதிரிக்கு வழங்கப்பட்டது.

இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்களை அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் நெறிப்படுத்தியிருந்ததுடன், தீர்ப்பு வழங்கும் வேளையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டவாதி இம்மானுவேல் விக்டர் நேரு தேவவிதுரன் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார்.

தண்டனை பெற்ற மேற்படி நபர், தற்போதும் வேறொரு போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மூத்த தமிழ் தேசிய அரசியல்வாதி சிவாஜிலிங்கத்தின் புகழுடல் தகனம்!
அடுத்த செய்தி தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிரமதானப் பணிகள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இலஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத உள்ளூராட்சி நிறுவன கலாசாரத்தை உருவாக்கும் நிகழ்வு!

ஆகஸ்ட் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலை சுற்றுலாப் பயணிகளுக்காகச் சென்ற பேருந்து தீக்கிரை!

அக்டோபர் 11, 2026
இலங்கை

தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என கோரி போராட்டம்!

செப்டம்பர் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

குழந்தைகளிடையே நோய் பரவல் அதிகரித்துள்ளது – வைத்தியர் தீபால் பெரேரா

ஜூன் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?