டொராண்டோவில், குளிர்காலத்தை முன்னிட்டு E-Bike மற்றும் E-Scooter வாகனங்களைக் TTC பொதுப் போக்குவரத்து சேவைகளில் எடுத்துச் செல்வதற்கான தடையை இன்று நவம்பர் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.
இதன்படி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி லித்தியம் – அயன் பேட்டரிகளால் ஏற்படக்கூடிய தீ விபத்துக்களைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என TTC தெரிவித்துள்ளது.
எனினும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் மின்சார சக்கர நாற்காலிகளுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், சாதாரண மிதிவண்டிகள் மற்றும் மின்சார வசதியற்ற மடிக்கக்கூடிய ஸ்கூட்டர்களைத் தொடர்ந்து எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
