Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வட்டுக்கோட்டை தோட்ட கிணற்றில் இருந்து தாய் மாமனும் மருமகனும் சடலமாக மீட்பு!

பிப்ரவரி 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து தாய் மாமனும் மருமகனும் நேற்றைய தினம் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை தெற்கை சேர்ந்த பெருமாள் மகிந்தன் (வயது 30) என்பவரும், அவரது தங்கையின் மகனான டனுசன் (வயது 03) ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த மகிந்தன் தனது மனைவி, தங்கை மற்றும் தங்கையின் மகனுடன் துணைவி பகுதிக்கு இரண்டு துவிச்சக்கர வண்டியில் சென்றுள்ளனர்.

இவர்கள் வீடு திரும்பும் போது மகிந்தனும், அவரது தங்கையின் மகனும் ஒரு துவிச்சக்கர வண்டியில் முன்னால் சென்றுள்ளனர். பின்னால் மனைவியும் தங்கையும் வந்துள்ளனர் .

பின்னால் வந்த இருவரும் வீதியில் மகிந்தனின் துவிச்சக்கர வண்டியை அவதானித்து, அவர்களை தேடிய போது, மூன்று வயது சிறுவன் சடலமாக கிணற்றில் மிதப்பதை கண்ணுற்று, தாயார் கதறியதை அடுத்து, அயலவர்கள் கூடி சிறுவனை மீட்டு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

தொடர்ந்து சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, உயிரிழந்த சிறுவனின் மாமனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது, தாய்மாமன் கிணற்றினுள் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

அவரது சடலத்தை மீட்டு போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிணற்று கட்டில் தாய் மாமனின் பாதணிகள் இருப்பதனால், இருவரும் கிணற்றினை பார்க்க முற்பட்ட வேளை தவறி கிணற்றினுள் விழுந்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் – ஒருவர் பலி!
அடுத்த செய்தி நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை 22ஆம் திகதி ஆரம்பம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொளுடன் ஒருவர் கைது

ஏப்ரல் 14, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் கையெழுத்து போராட்டம்

ஜூலை 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

நவம்பர் 14, 2025
இலங்கை

யாழில். மணல் அகழ்வதற்கான போலி அனுமதி பத்திரத்துடன் ஒருவர் கைது.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?