கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள நீண்டகால பொருளாதாரத் தடைக்கு எதிரான தனது நிலைப்பாட்டை கனடா தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும் என கியூபா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா, கியூபாவுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீது அழுத்தங்களை அதிகரித்து வரும் நிலையில், இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கனடாவுக்கான கியூபா தூதுவர் ரொட்ரிகோ மல்மியேர்கா டியாஸ், கடந்த காலங்களைப் போலவே கனடா தொடர்ந்து கியூபாவுக்கு ஆதரவாகச் செயற்படும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளும் அவை தீவிரப்படுத்தப்படுவதும் நடைமுறையில் மக்களின் உயிரிழப்புகளுக்குக் காரணமாகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கியூபா முன்வைத்துள்ள அமெரிக்காவின் பொருளாதார, வர்த்தக மற்றும் நிதித் தடைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்மானம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையில் அடுத்த வாரம் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

