Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ரியாத் விமான நிலையத் தாக்குதல்: அமெரிக்கா தலையிட பரிசீலனை

அக்டோபர் 10, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக நாட்டின் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அங்குள்ள அனைத்து செயல்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை.

இருப்பினும், சவூதி அரேபியாவுக்கு எதிராக ஏமனின் ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏவுகணைத் தாக்குதல்களின் தீவிரமடைதலுக்கு மத்தியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாரத்தில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட இரு தாக்குதல்களில் நால்வர் உயிரிழந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக இந்த விமான நிலையம் தாக்கப்பட்‌டுள்ளது.

சவூதியின் முன்னெச்சரிக்கை அமைப்பு இத்தாக்குதல் குறித்து எந்த எச்சரிக்கையையும் விடுக்கவில்லை.

விமான நிலையத்திற்குள் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகவும், புறப்படும் வாயிலுக்கு அருகில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலர் காயமடைந்து கிடந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் பாதிக்கப்பட்ட பயணி ஒருவரும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் 12-க்கும் மேற்பட்ட அவசர ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்ததையும் அவர்கள் கண்டுள்ளனர்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து, ரியாத் செல்லும் அனைத்து விமானங்களும் திருப்பி விடப்பட்டுள்ளதாகவோ அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவோ ‘flightradar24’ இணையதளம் தெரிவித்துள்ளது.

குவைத் ஏர்வேஸ், எதிஹாட் ஏர்வேஸ் மற்றும் கட்டார் ஏர்வேஸ் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை ரத்து செய்துள்ளன.

ரியாதில் முக்கிய ஆற்றல் மற்றும் முதலீட்டு மாநாடுகள் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அம்மாநாடுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், ஹூதிகளுக்கு எதிரான சவூதியின் தாக்குதலில் அமெரிக்கா இணைவது குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

மேலும், ரியாதில் உள்ள அமெரிக்க, பிரித்தானிய, அயர்லாந்து மற்றும் கனடிய தூதரகங்கள் இச்சம்பவம் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், விமான நிலையப் பகுதிகளைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளன.

ஏமனின் சவூதி ஆதரவு அரசாங்கம் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதை அடுத்து, சவூதி வான்வெளியை இராணுவ மண்டலமாக அறிவித்துள்ள ஹூதிகள், அங்கு விமானப் பயணங்களைத் தவிர்க்குமாறு எச்சரித்துள்ளனர்.

முந்தைய செய்தி மன்னருக்கு விசுவாசப் பிரமாணம் செய்யும் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு
அடுத்த செய்தி ஒகினாவா கொலை வழக்கு: இணைந்து செயற்பட அமெரிக்கா உறுதி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

மருத்துவமனை கழிப்பறையில் பிறந்த குழந்தையை கவ்விச் சென்ற நாய் – இந்தியாவில் சம்பவம்.

நவம்பர் 22, 2024
உலகம்

அவுஸ்திரேலியாவில் சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை!

ஜூலை 29, 2025
அண்மைய செய்திகள்உலகம்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் ஒன்றை மேற்கொள்ள வாய்ப்பு

ஜூன் 27, 2026
உலகம்

அமெரிக்காவை உலுக்கும் வெப்ப அலை: இரவு நேரங்களில் பதிவாகும் கடுமையான வெப்பம்

ஆகஸ்ட் 12, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?