கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நாடாளுமன்ற உறுப்பினர் கருனைநாதன் இளங்குமரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கண்டாவளை கோட்ட பாடசாலைகள் மூன்றிற்கு பதினைந்து இலட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா நிதியில் உதவி வழங்கபட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று கண்டாவளை கோட்டத்திற்குற்பட்ட பாடசாலைகளான தட்டுவன் கொட்டி கண்ணகி அம்மன் வித்தியாலயத்திற்கு ஐந்து இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா பெறுமதியான கணனி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அதே வேளை கல்லாறு தமிழ் வித்தியாலயத்திற்கு ஐந்து இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா பெறுமதியான கணனி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. குமாரசாமிபுரம் அரசினர் தமிழ்கலவன் பாடசாலைக்கு திறன் வகுப்பறைக்குரிய ஐந்து இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், க்ளீன் சிறீலங்கா செயற்றிட்டத்தின் மாவட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன், மற்றும் வலய கல்வி பணிப்பாளர் க. சிவனருள்ராஜா மாவட்ட செயலக,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குறித்த பொருட்களை வழங்கி வைத்தார்.

