மொன்றியலின் Lionel-Groulx Metro Station பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நாற்பது வயதுகளில் உள்ள ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சனிக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், குறித்த நபர் மெட்ரோ ரயில் பாதையில் விழுந்ததாகவும், மீண்டும் platform-க்கு ஏற முடியாத நிலையில் ரயிலில் மோதுண்டதாகவும் STM தெரிவித்துள்ளது.
காவல்துறையின் ஆரம்ப விசாரணையில், அவர் தள்ளிவிடப்படவில்லை என்றும், இது ஒரு விபத்தாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ பயணிகள் platform-இல் உள்ள மஞ்சள் கோட்டுக்கு பின்னால் பாதுகாப்பான தூரத்தில் நிற்குமாறு STM மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

