Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மண்ணை காதலித்ததால் காதலர் தினத்தன்று விடுவிக்கப்பட்டோம் – வேழன் சுவாமிகள்

பிப்ரவரி 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
module:0facing:0; hw-remosaic: 0; touch: (0.29097223, 0.29097223); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
SHARE

மண்ணை காதலித்ததால் காதலர் தினத்தன்று விடுவிக்கப்பட்டோம் என வேழன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்கான வழக்கு கிடப்பில் போடப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டம் கடந்த 2023ம் ஆண்டு பெப்ரவரி மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக ஆரம்பமாகியிருந்தது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் 2023 ஆகஸ்ட் மாதம் வேழன் சுவாமிகள், MK சிவாஜிலிங்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக கிளிநொச்சி பொலிசாரால் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கானது நீண்டகாலமாக தவணையிடப்பட்டு வந்த நிலையில் இன்று குறித்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் கிளிநொச்சி சட்டத்தரணிகள் பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகினர்.

இந்த நிலையில் குறித்த வழக்கானது நீதவானால் கிடப்பில் போடப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே வேழன் சுவாமிகள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த வழக்கானது இன்றைய தினம் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது. எத்தனை வழக்குகள் வந்தாலும் இந்த மண் மீதான காதல் மாறாதது. எங்கள் உயிர் இருக்கும் வரை இந்த மண் மீதான காதலும், இன விடுதலையும் அதற்கான போராட்டமும் எப்பொழுதும் தொடரும் என அவர் தெரிவித்தார்.

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி போராட்டத்தில் பங்குபற்றியமைக்கான வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. கிளிநொச்சி சட்டத்தரணிகள் எமது சார்பில் ஆஜராகி இருந்தார்கள்.

கிட்டத்தட்ட 2 வருடங்களாக இடம்பெற்ற இந்த வழக்கு கிடப்பிலே போடப்பட்டிருக்கின்றது. எங்களது ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாங்கள் செய்யும் போராட்டங்கள் மீது சிறிலங்கா அரசின் உத்தரவின் பெயரில் சிறிலங்கா பொலிசார் அவ்வப்போது பொய் வழக்குகளை போட்டு துன்புறுத்துவதும், அச்சுறுத்துவதும் மிகவும் கண்டிக்க வேண்டிய விடயமாக இருக்கின்றது எனவும் வேழன் சுவாமிகள் தெரிவித்தார்.

முந்தைய செய்தி யாழ் . பல்கலை துணைவேந்தருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்.
அடுத்த செய்தி எத்தனை வழக்குகளை போட்டாலும் நாங்கள் அடிபணிய மாட்டோம் – MK சிவாஜிலிங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர்…

மார்ச் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை!

நவம்பர் 13, 2025
இலங்கை

100 புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் முதற் கட்டம் இன்று ஆரம்பமானது!

செப்டம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

607ஆக அதிகரித்து செல்லும் உயிரிழப்புகள்!

டிசம்பர் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?