ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஏற்பாட்டில் “ஜன சடன” மக்கள் பேரணி, இன்று அனுராதபுரத்தில் நடைபெறுகிறது.
அனுராதபுரம் மாநகர சபை விளையாட்டு மைதானத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்தப் பேரணியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சியின் முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகள், பொருளாதார நிலைமை மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதே இந்தப் பேரணியின் முக்கிய நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாராளுமனர் உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனா அங்கு உரையாற்றுகையில்
இந்த நாட்டிற்கு என்ன நேர்ந்தாலும் நாங்கள் சிங்கள மக்களுடன் துணை நிற்போம் . இதுவே நாட்டிற்கு நான் சொல்லும் முதல் செய்தி. நான் சிங்கள மக்கள் என்று சொல்லும்போது, மஹிந்த ராஜபக்ஷவை மட்டுமே நினைக்கிறேன், வேறு யாரையும் அல்ல என மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் தெரிவித்தார்.
மேலும் நாமல் ராஜபக்ஷ தன இலங்கையின் அடுத்த ஜனாதிபதி எனவும் தெரிவித்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவி கொத்தமல்லி ஜனாதிபதி என மேடையில் கிண்டல் செய்து உரையாற்றி உள்ளார்.
எந்தவொரு முன்னணி கட்சியும் அர்ஜுனாவை சேர்த்துக்கொள்ளாத நிலையில் தற்பொழுது பொதுஜன பெரமுனவிற்கு ஆதாரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அடுத்த தேர்தலில் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதை கருதி தற்பொழுது நாமலின் பின்னால் வால்பிடித்து திரிகின்றமை தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

