Montréal நகரில் இன்று, செப்டம்பர் 12ஆம் தேதி, பெரும்பாலும் வெயிலான வானிலை நிலவும் என்று Environment Canada தெரிவித்துள்ளது.
இன்றைய அதிகபட்ச வெப்பநிலை சுமார் 25 degree Celsius ஆக இருக்கும்.ஆனால் இன்று இரவு மேகங்கள் அதிகரித்து, சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை Montréal பகுதியில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
அதன்பின்னர் திங்கட்கிழமை மீண்டும் வெயிலான வானிலை நிலவும் என்றும் வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இன்று வெளியே செல்லும் மக்கள் வெப்பமான பகல் நேரத்தையும், இரவு நேரத்தில் ஏற்படக்கூடிய மழையையும் கருத்தில் கொண்டு தங்களுடைய பயணத்தை திட்டமிடுவது நல்லது.

