Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மண்டபம் முகாமில் இலங்கைத் தமிழரை செருப்பால் அடிக்க முயற்சித்த ஆட்சியர்!

செப்டம்பர் 10, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், விடுமுறை  கேட்டு சென்ற இலங்கைத் தமிழர் ஒருவரை,  ஆட்சியர் தகாத வார்த்தைகளால் பேசி, செருப்பால் அடிக்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே அமைந்துள்ள மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள், தமிழக அரசால் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள், வெளியூர் அல்லது வெளி மாவட்டங்களில் வசிக்கும் உறவினர்களைச் சந்திக்கச் செல்லவும், மருத்துவ சிகிச்சைக்காக வெளியே செல்லவும், முகாம் சார் ஆட்சியரிடம் முன் அனுமதி மற்றும் விடுப்பு பெற வேண்டிய நடைமுறை இருந்து வருகிறது.

இந்த நிலையில், ஜெகன் என்ற இலங்கைத் தமிழர், சென்னையில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சார் ஆட்சியர் கலைமன்னனிடம் விடுப்பு கேட்டு விண்ணப்பித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், விடுப்பு வழங்குவதற்கு சார் ஆட்சியர் லஞ்சமாக பணம் கேட்டதாக ஜெகன் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பணம் வழங்காததால் தனக்கு விடுப்பு வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இன்று மீண்டும் தனது விடுப்பு விண்ணப்பம் தொடர்பாக சார் ஆட்சியரை சந்தித்து ஜெகன் கேட்டபோது, அவரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், செருப்பால் அடிக்க முயன்றதாகக் கூறப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளின் தரப்பில் விளக்கம் ஏதும் வெளியாகியுள்ளதா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு, உண்மை நிலை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது.

முந்தைய செய்தி வெடுக்குநாறிமலையில் சைவ மற்றும் பௌத்த வழிபாட்டுக்கு அனுமதி!
அடுத்த செய்தி யாழில் முன்பகை காரணமாக நடந்த கொடூரக் கொலை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பொலிஸ் அதிகாரி ஒருவர் ஜஸ் போதைப் பொருளுடன் கைது!

அக்டோபர் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவிலும் கண்டனப்போராட்டத்தை மேற்கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

ஆகஸ்ட் 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமானது.

மே 21, 2026
இலங்கை

நெடுந்தீவை சென்றடைந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து

பிப்ரவரி 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?