Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

பிரித்தானியாவில் விமான சேவை முடக்கம்: விசாரணைக்கு அரசு உத்தரவு

செப்டம்பர் 9, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

பிரித்தானியாவில் ஏற்பட்ட கணினிச் செயலிழப்பினால் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஒரு வாரத்திற்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அந்நாட்டின் ‘NATS’ விமானக் கட்டுப்பாட்டு சேவை நிறுவனத்திற்குப் பிரித்தானிய அரசு உத்தரவிட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இரண்டு நாட்களில் சுமார் 2,000 விமானங்கள் வரை ரத்து செய்யப்பட்டன.

இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டதுடன், விமான நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து விளக்குமாறு NATS நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்ட்டின் ரோல்ஃபை (Martin Rolfe) போக்குவரத்து அமைச்சர் ஹெய்டி அலெக்சாண்டர் (Heidi Alexander) நேரில் அழைத்து விசாரணை நடத்தினார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், இந்த முடக்கம் இணையத் தாக்குதலால் (cyberattack) ஏற்படவில்லை என்றும், இவ்வாறான தவறைத் தவிர்த்திருக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் (CAA) சார்பில் இது குறித்து தனியான, சுயேச்சையான விசாரணை நடத்தப்பட்டு, அடுத்த ஆறு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் NATS நிறுவனத்தில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய செயலிழப்பு இதுவாகும்.

2023 ஆகஸ்ட் மாதத்திலும் ஏற்பட்ட இதேபோன்ற கோளாறினால் விமான நிறுவனங்களுக்கு சுமார் 100 மில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டது.

தொடர்ச்சியான இத்தவறுகளுக்குப் பொறுப்பேற்று NATS நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்ட்டின் ரோல்ஃப் உடனடியாகப் பதவிய விலக வேண்டும் என ரயானேர் (Ryanair) விமானச் சேவையின் தலைமை நிர்வாகி மைக்கேல் ஓ’லியரி வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவத்தால் தங்களுக்கு 3 மில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயானேர் தெரிவித்துள்ளது.

அதேவேளை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை 100 விமானங்களையும், புதன்கிழமை 190 விமானங்களையும் ரத்து செய்தது.

விமானங்களும் ஊழியர்களும் வேறு இடங்களில் முடங்கியுள்ளதால், விமானச் சேவைகள் இயல்புநிலைக்குத் திரும்ப மேலும் சில நாட்கள் ஆகலாம் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் விமான நிலையங்களுக்குப் புறப்படுவதற்கு முன்னர் தமது விமானச் சேவைகளை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்தி கியூபெக்கிலிருந்து அமெரிக்காவிற்கு உற்பத்தியை மாற்றுகிறது சப்போரோ மதுபான நிறுவனம்!
அடுத்த செய்தி லாவாலில் வாகனத்திற்குத் தீவைப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்.

ஆகஸ்ட் 5, 2024
அண்மைய செய்திகள்உலகம்

இந்தோனேசியா ஜாவா தீவில் மண்சரிவு அபாயம்!

நவம்பர் 15, 2025
உலகம்

காஸா மீது இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல்!

செப்டம்பர் 16, 2025
உலகம்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

செப்டம்பர் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?