Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தாய்லாந்து செல்லும் இலங்கையர்களுக்கு இனி விசா கட்டாயம்!

செப்டம்பர் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கையர்களுக்கு வழங்கி வந்த விசா அற்ற (Visa-free) பிரவேசச் சலுகையை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தாய்லாந்து அரசாங்கம் ரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் சில இலங்கையர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதே இந்தத் தீர்மானத்திற்கு பிரதான காரணம் என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று உரையாற்றிய போதே அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார். தாய்லாந்தில் இலங்கையர்கள் சிலர் அண்மைய காலத்தில் பல்வேறு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், குறிப்பாக தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்துதல் மற்றும் பௌத்த துறவிகள் சிலர் சட்டவிரோதப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் என்பனவும் இந்த விசா கட்டுப்பாட்டிற்கு வழிவகுத்துள்ளதாக விவரித்தார்.

இதன் காரணமாக, விசா அற்ற பிரவேசச் சலுகை இரத்து செய்யப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் தாய்லாந்து அரசாங்கம் உள்ளடக்கியுள்ளது. இலங்கைக்கான தாய்லாந்து தூதரகத்தின் உறுதிப்படுத்தலின்படி, 15 ஆம் திகதிக்குப் பின்னர் தாய்லாந்திற்குப் பயணம் செய்யும் அனைத்து இலங்கையர்களும் புறப்படுவதற்கு முன்னர் விசா பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 14 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தாய்லாந்திற்குச் செல்லும் இலங்கையர்கள் பழைய நடைமுறையின் கீழ் பயணிக்க அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தாய்லாந்து அதிகாரிகளுடன் இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையே விசா வசதிகள் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் (Bilateral agreement) ஒன்றை எட்டுவதற்கு முன்மொழிவுகள்  சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் இணைந்து இந்த ஒப்பந்தத்திற்கான வரைவை தயாரிக்கும்
பணிகளில் ஈடுபட்டுள்ளன.

முந்தைய செய்தி டொராண்டோவை குறிவைக்கும் NDP தலைவர் ஆவி லூயிஸ்!
அடுத்த செய்தி வவுனியா மாநகர முதல்வர் விவகாரம்: இடைக்காலத் தடை நீடிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பதவி நீக்கப்பட்ட சொஹாரா புஹாரி

பிப்ரவரி 12, 2026
இலங்கை

32 பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தம்பதியினருக்கு வவுனியா நீதிமன்றம் 14 நாட்கள் விளக்கமறியல்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் சௌத்பார் பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன் கைது

ஆகஸ்ட் 9, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பொலிஸ் நிலையத்திற்கருகில் கைவிடப்பட்ட நிலையில் வேன் ஒன்று மீட்கப்பட்டுள்ளது

ஜூன் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?