Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

செப்டம்பர் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி, மேற்குவங்கத்தின் நந்திகிராம், ரெஜிநகர் மற்றும் அசாமின் நாகோன் ஆகிய தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சத்தியபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால் இந்த இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு தற்போது தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 16 வரை நடைபெறுகிறது.

தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை செப்டம்பர் 17-ஆம் தேதியும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறச் செப்டம்பர் 19-ஆம் தேதி கடைசி நாளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 6 அன்று வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அக்டோபர் 9-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் மொத்தம் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ள போதிலும், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கான தேர்தல் வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவற்றின் இறுதித் தீர்ப்பு வரும் வரை அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது எனத் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதனால் தற்போதைக்கு வழக்குகள் ஏதும் இல்லாத 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுத் தேர்தல் பணிகள் முடுக்கப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி சீனாவின் காத்மண்டு-திபெத் ரயில் திட்டத்தில் பின்னடைவு
அடுத்த செய்தி ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயமாக்க தனித்தீர்மானம்: நாளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்!

ஆகஸ்ட் 9, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்..!!

பிப்ரவரி 12, 2025
இந்தியா

ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை ஏன் மூடக்கூடாது? – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

ஆகஸ்ட் 7, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

தெலுங்கானாவில் பறவைக் காய்ச்சல் காரணமாக 8,000 கோழிகள் உயிரிழப்பு…..

மார்ச் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?