Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கீழ் மல்வத்து ஓயா திட்டம் யாருக்கு? சத்தியலிங்கம் MP சரமாரிக்கேள்வி

செப்டம்பர் 4, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE
வவுனியா மற்றும் அனுராதபுரத்தை உள்ளடக்கிய கீழ் மல்வத்து ஓயா திட்டம் மூலம் செட்டிகுளம் பகுதியில்  புதிய குடியேற்றங்களையா உருவாக்க போகின்றீர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் காரசாரமாக கேள்வி எழுப்பினார்….
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதி அமைச்சரும் இணைத்தலைவருமான உபாலிசமரசிங்க தலைமையில் இன்று இடம்பெற்றது…
குறித்த கூட்டத்தில் கீழ் மல்வத்துஓயா திட்டத்திற்காக செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் 1200 ஏக்கர் காணிகள் வனவளத்திணைக்களத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டது.
அது தொடர்பாக அந்த திட்டத்திற்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் ஒருங்கிணைப்பு குழுவிற்கு விளக்கம் ஒன்றை அளித்திருந்தார்.  இந்த திட்டதின் கீழ் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் அண்ணளவாக 500ஏக்கர் அளவிலான நிலம் நீருக்குள் செல்லவுள்ளதாகவும் அதில் பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்றுக்காணியும் நட்ட ஈடும் வழங்கப்படும் என கூறியிருந்தார்.
இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் இந்த திட்டத்தில் 500 ஏக்கல் நிலம் நீருக்குள் செல்லவுள்ள நிலையில் எதற்காக 1200 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியதுடன் அப்படியானால் அந்த பகுதியில் அனுராதபுரம் பகுதிகளை சேர்ந்த மக்களை கொண்டுவந்து புதியகுடியேற்றமா செய்யப்போகின்றீர்கள் என கேட்டார்.
இதற்கு பதில் அளித்த அந்த அதிகாரி குடியேற்றம் செய்யவில்லை ஆனால் அனுராதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் வயல் காணிகளை வழங்கவுள்ளதாக கூறினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வவுனியாவில் எத்தனையோ மக்கள் காணிகள் இல்லாத நிலையில் உள்ளனர். இந்த மாவட்டத்தில் வசிக்காத அனுராதபுரம் பகுதியை சேர்ந்த மக்களுக்கு எந்த அடிப்படையில் இங்கு காணி வழங்குகிறீர்கள் என சுட்டிக்காட்டினார்.
புதிதாக ஏன் பிரச்சனைகளை உருவாக்குகின்றீர்கள்.  நான் கதைப்பது இனவாதம் அல்ல.  எனது மாவட்ட மக்கள் தொடர்பாக கேள்வி கேட்கும் உரிமை மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனக்கு உள்ளது.
இந்த கீழ் மல்வத்து ஓயா திட்டம் தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிற்கு இன்றுவரை எதாவது தெரியுமா அல்லது அரச அதிபருக்காவது தெரியுமா அல்லது திட்டம் தொடர்பாக ஒரு விடயத்தையாவது இதுவரை நீங்கள் தெளிவுபடுத்தியுள்ளீர்களா. ஏன் ரகசியமாக அனைத்தையும் செய்கின்றீர்கள் என அடுக்கடுக்கான கேள்விகளை தொடுத்தார்.
அவரது கேள்விகளுக்கான உரிய பதிலை கூட்டத்திற்கு தலைமைதாங்கிய பிரதி அமைச்சரோ அல்லது திட்டத்திற்கு பொறுப்பான அதிகாரியோ வழங்காமையால் அந்த விடயம் நீண்டு சென்றது.
இந்நிலையில் திட்டம் தொடர்பான ஒரு தெளிவூட்டலை வழங்குவதற்கு தாங்கள் தாயாராக இருப்பதாக திட்டத்திற்கு பொறுப்பான அந்த அதிகாரி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது
முந்தைய செய்தி கனேடிய மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு
அடுத்த செய்தி பாலம் அமைக்க நீர் எடுக்க வெட்டிய குழியில் சிறுவன் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கொக்கட்டிச்சோலையில் கணவனால் தீ வைத்த மனைவி உயிரிழப்பு

மார்ச் 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

திங்கட்கிழமை முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானம்

ஜனவரி 31, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் வெள்ளத்தை எதிர்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல்

ஆகஸ்ட் 11, 2026
1
இலங்கை

மன்னாரில் தாதிய உத்தியோகத்தர்களால் போராட்டம் முன்னெடுப்பு….

மார்ச் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?