Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

நேபாள வெள்ளத்தில் 669 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் மாயம்!

ஆகஸ்ட் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேபாள அரசின் சமீபத்திய தகவலின்படி, வெள்ளத்தில் 626 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2,426 பேர் இதுவரை தொடர்பின்றி காணப்படுகின்றனர். மேலும் 4,451 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், 101 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெள்ளம் மற்றும் மண்சரிவால் வீதிகள், பாலங்கள், குடியிருப்புகள் மற்றும் நீர்மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. குறிப்பாக ராசுவா பகுதியில் உள்ள நீர்மின் நிலைய சுரங்கத்தில் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை மீட்க நேபாள இராணுவத்தினர் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றனர்.

மோசமான காலநிலை மற்றும் கடுமையான மலைப்பகுதி காரணமாக மீட்புப் பணிகள் சவால்களை எதிர்கொண்டுள்ளன. இதனிடையே, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து தொழில்நுட்ப மற்றும் நிவாரண உதவிகளை நேபாளம் பெற்று வருகிறது. வெளிநாட்டு உதவியை நிராகரித்ததாக வெளியாகிய தகவல்களையும் நேபாள அரசு மறுத்துள்ளது.

இந்த பேரழிவால் ஏற்பட்ட சேதங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு 4 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வரை தேவைப்படலாம் என நேபாள நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காணாமல் போன ஆயிரக்கணக்கானோரை தேடும் பணியும், சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளும் நேபாளத்தில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

முந்தைய செய்தி “நீதிக்கான நீள் பயணம்” – யாழில் நாளை சர்வதேச மாநாடு
அடுத்த செய்தி அமெரிக்காவின் 50% வரி: எண்ணெய்க் குழாய் திட்டத்தை விரைவுபடுத்தும் கனடா!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலையில் கண்காட்சி

செப்டம்பர் 30, 2026
உலகம்

சீனாவில் நில அதிர்வு

செப்டம்பர் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் குருசு நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தீ பரவல்

ஆகஸ்ட் 23, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

27 வருடங்களுக்கு வல்வெட்டித்துறை நகர சபையின் நகர பிதாவான சிவாஜிலிங்கம்!

நவம்பர் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?