Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமனம்!

ஆகஸ்ட் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கட்சியின் புதிய அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

​இந்நியமனத்தைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகச் சந்திப்பொன்று இன்று (23) ஞாயிற்றுக்கிழமை வொய்ஸ் ஒப் மீடியாவில் நடைபெற்றது.

​ஊடகச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைப்பாளர் தெய்வேந்திரராசா புலேந்திரன், மட்டக்களப்பு – கிரான் பாலம் மற்றும் தற்போதைய அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வீதிப் புனரமைப்புப் பணிகள் மிகவும் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார்.

மழைக்காலங்களில் பொதுமக்கள் இதனால் சந்திக்கும் இன்னல்களையும் பாதிப்புகளையும் தவிர்க்கும் வகையில், உறுதியான மற்றும் நிலையான உட்கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

​மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதே தனது முதன்மை இலக்காகும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

​முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வீதிப் புனரமைப்பு மற்றும் உட்கட்டமைப்புத் திட்டங்களை நினைவுகூர்ந்த ஆதரவாளர்கள், புதிய அமைப்பாளரின் நியமனத்தை வரவேற்பதாக இதன்போது தெரிவித்தார்.

​மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் ஆகிய மூவின மக்களின் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகண்டு, இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க புதிய அமைப்பாளருடன் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாக கட்சியின் மாவட்ட ஆலோசகர் ராஜன் மயில்வாகனம் இதன் போது தெரிவித்தார்.

முந்தைய செய்தி பலாலியில் 10 ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அடுத்த செய்தி வசாவிளான் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

செம்மணி நாளையுடன் நிறைவு!

செப்டம்பர் 5, 2025
இலங்கை

யாழில். வேக கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் விபத்து!

அக்டோபர் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

2026ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம்!

ஜூலை 21, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேல் மீது தீவிரமான போர் நடத்தப்படும் -ஈரான் எச்சரிக்கை.

ஜூலை 1, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?