வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை நான்காம் திருவிழா இடம்பெற்றது.
நான்காம் திருவிழாவின் போது , வேல் பெருமானும், வள்ளி – தெய்வானையும் பச்சை மயில் வாகனத்தில் எழுந்தருளி , பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் , தொடர்ந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

