இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மிர்சா காலி தெருவில் அமைந்துள்ள உணவகமொன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தீ விபத்தானது இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக வருகை தந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

